Wednesday, December 2, 2020

சுப்ரீம் கோர்ட் திட்டமிட்டு செய்த சனநாயக படுகொ...

 ஈவிஎம் ஐ நாம் ஏன் ஒதுக்கணும். மக்களின் சனநாயக உரிமையே வாக்குரிமை தான். வாக்குரிமை தான் நாம் சுதந்திர நாட்டில் வாழ்கிறோமா..இல்லை அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோமா என்பதற்கான ஆதாரம்...அப்படிப்பட்ட நிலையை உறுதி செய்வது நம் வாக்குரிமை தான். அதை நேர்மையாக செயல்படுத்தினால் மட்டுமே இது சுதந்திரநாடு என உறுதிபடுத்தமுடியும்.ஆனால் கடந்த தேர்தல்களில் சனநாயக உரிமையை நிலைநாட்டும் இந்த வாக்கு பதிவு செய்வதில் எத்தனை திருட்டுத்தனங்கள் நிகழ்ந்தது என்பதை மக்களே தெளிவாக அறிந்திருக்கிறார்கள். பாதுகாப்பாய் இருக்க வேண்டிய பல ஆயிரம் வாக்கு எந்திரங்கள் குப்பைத்தொட்டியில் வீசிய குழந்தையை போல் அநாதையாக கிடந்தது. அது வாக்கு எந்திரம் மட்டுமல்ல... நம் சுதந்திரமும் சனநாயகமும் தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஈவிஎம் ஐ கண்டுபிடித்த மேதைகளே.. அதை பயன்படுத்த நாங்கள் ஒன்றும் முட்டாள்களல்ல...என கூறிய பிறகும் இந்தியா மட்டும் அதை பிடித்துக்கொண்டு நேர்மையாக நடத்துவோம் என முட்டாள்தனமாக கூறுவது...மலத்தை இலையில் வைத்துவிட்டு சோறு தான் சாப்பிடுங்கள் என கூறுவது போலுள்ளது. சுப்ரீம் கோர்ட்டே வாக்கு எந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கூடாது என தீர்ப்பளித்தென்பது சுப்ரீம் கோர்ட் டே திட்டமிட்டு செய்த சனநாயக படுகொலை என்பதாகவே புரிந்துகொள்ள தோன்றுகிறது..ஆகவே.. வரும் கால சந்ததியினருக்கு சொத்து சேர்ப்பதில் கவனம் செலுத்தி வரும் மூடர்களே... வருகின்ற தேர்தலில் ஈவிஎம் எந்திரங்களை ஒழித்து வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவில்லை எனில்...நீங்களே உங்கள் சந்ததிகளை நெருப்பிலிட்டு கொளுத்துவதற்கு சமம் என்பதை உணரவேண்டும். உணர்வீர்கள் என நம்புகிறேன். 

பகிருங்கள்..ஆரோக்கியமான புதிய உலகம் செய்வோம்.💐🙏

No comments:

Post a Comment

கொல்ளி...

 https://youtu.be/fuZsJK7Wslg